உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும், யோகராஜன். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் யோகராஜன் தரப்பை சேர்ந்த அஞ்சாபுலி, ராஜாராம் ஆகியோர், சக்திவேல் வீட்டு அருகே அமர்ந்து ஆபாசமாக பேசியுள்ளார். இதை சக்திவேல் தட்டிகேட்டதால் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.இதில் சந்தோஷ், ஜனார்த்தனன், அஞ்சாபுலி ஆகியோர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின்பேரில் இருதரப்பையும் சேர்ந்த அஞ்சாபுலி, யோகராஜன், ராஜாராம், சுமதி, சசி வள்ளி, சக்திவேல், ஜனார்த்தனன், சந்தோஷ் ஆகிய, 8 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை