மேலும் செய்திகள்
போதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம்
12-Sep-2024
கடலுார்: கடலுாரில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் மாநகரில், இயக்கப்படும் ஆட்டோக்களில், பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்கின்றனர். இதனால், ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்தில் சிக்கி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.இதை தடுக்கும் வகையில், டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சிக்னலில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அதிகபடியான பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.
12-Sep-2024