மேலும் செய்திகள்
பைக் விபத்தில் இருவர் படுகாயம்
17-Dec-2024
குள்ளஞ்சாவடி; வாலிபரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், கோபால் மகன், விஜயன், 49. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன், அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரும் விஜயனை ஆபாசமாக திட்டி, தாக்கினர். புகாரின் பேரில் வெங்கடேசன், மணிமேகலை ஆகியோர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
17-Dec-2024