துணை மேயர் உட்பட 200 பேர் மீது வழக்கு
கடலுா : கடலுாரில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக மாநகராட்சி துணை மேயர் உட்பட வி.சி., கட்சியினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.லோக்சபாவில் அம்பேத்கர் பற்றி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, வி.சி., கட்சியினர் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று முன்தினம் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, அண்ணா பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான போலீசார், ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தனர். ஆனாலும், தடையை மீறி ஊர்வலமாக சென்றனர்.இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட 200 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.