உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணுக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

வடலுார்: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். வடலுார் அடுத்த கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி செல்வி, 53 ; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவருக்கும் இடையே மனை தொடர்பான பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் செல்வியை ஸ்ரீமதி தரப்பை சேர்ந்தோர் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து செல்வி குறிஞ்சிப்பாடி கோ ர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவை அடுத்து நேற்று வடலூர் போலீசார், செல்வியை மிரட்டிய ஸ்ரீமதி, பார்வதி, ராகுல் ஆகிய, 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ