உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி : ஒருவரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையைச் சேர்ந்தவர் சிலம்பரசன்,38; இவர் நேற்று முன்தினம் இரவு குறிஞ்சிப்பாடி சாவடி பஸ் ஸ்டாப் அருகே பைக்கில் சென்றார். அப்போது எதிரில் சிலர் பைக்கில் மோதுவது போல் வந்ததை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த அந்த கும்பல், சிலம்பரசனை திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியது. இதில், காயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார், குறிஞ்சிப்பாடி, இந்திரா நகர் மனோஜ், 20; ராஜிவ் காந்தி நகர் செந்தில்முருகன்,20; கஞ்சமநாதன்பேட்டை சச்சின்,20; வேலவிநாயகர்குப்பம் திவாகர் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை