மேலும் செய்திகள்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
05-Oct-2025
கடலுார்: வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கட லுார், முதுநகரைச் சேர்ந்தவர் சிவபாலன், 36; வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்கிறார். இவரது மனைவி மோனிஷா, 26; இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சிவபாலன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். கணவரை பார்ப்பதிற்காக, பரங்கிப்பேட்டை சின்னுாரில் உள்ள தாய் வீட்டில் இருந்து கடந்த 1ம் தேதி கடலுார் முதுநகருக்கு மோனிஷா வந்தார். அப்போது, சிவபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனையாக 20 சவரன் நகை கேட்டு ஒரு அறையில் தன்னையும், குழந்தையையும் அடைத்து துன்புறுத்துவதாக மோனிஷா கடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் கணவர் சிவபாலன், மாமனார் நாகராஜ், மாமியார் பாப்பாத்தி, சிவகுரு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2025