உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தம்பதி மீது தாக்கு 7பேர் மீது வழக்கு

தம்பதி மீது தாக்கு 7பேர் மீது வழக்கு

கடலுார்: வடலுார் அருகே வேகமாக பைக்கில் சென்றவர்களை தட்டிக்கேட்ட தகராறில், கணவன், மனைவியை தாக்கி 7பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்,39. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மனைவி உஷாவுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தமிழ்செல்வன், சுனில் ஆகியோர் பைக்கில் வேகமாக சென்றனர். இதை நந்தகுமார் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஏற்கனவே, அவர்களுக்கள் முன்விரோதம் உள்ள நிலையில், தமிழ்செல்வன் தரப்பினர் நந்தகுமாரை திட்டி தாக்கினர். தடுக்க வந்த உஷாவையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்செல்வன், சுனில் உள்ளிட்ட 7 பேர் மீது வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி