மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்
25-Oct-2025
குள்ளஞ்சாவடி: கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம், 72; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனபூபதி என்பவருக்கும் இடையே, நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஜோதி இராமலிங்கத்தின் வாழை தோப்பில் தனபூபதி, அவரது மனைவி தமிழரசி ஆகியோர், 150 வாழைக்கன்றுகளை சேதப்படுத்தினர். அதனை தட்டிக்கேட்ட முதியவர் ஜோதி ராமலிங்கத்தை, தம்பதியர் ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் தம்பதி மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Oct-2025