உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம உதவியாளரை  மிரட்டியவர் மீது வழக்கு

கிராம உதவியாளரை  மிரட்டியவர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பெண் கிராம உதவியாளரை மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த தோப்பிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் திருப்பதி, 58; இவர், தனது சொந்த நிலத்தில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்து சென்று, வேறு இடத்தில் கொட்டியுள்ளார். தகவலறிந்த, கொத்தட்டை கிராம உதவியாளர் விஜயசாந்தி, சம்பவ இடத்திற்கு சென்று, அனுமதி இல்லாமல் ஏன் மணல் எடுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த திருப்பதி, விஜயசாந்தியை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விஜயசாந்தி அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, திருப்பதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை