ஏரி மண் கடத்தியவர் மீது வழக்கு
விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே டிராக்டரில் ஏரி மண் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மங்கலம்பேட்டை தலைமைக் காவலர் செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எம்.பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஏரியில், ஜே.சி.பி., மூலம் மண் அள்ளிய அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், என்பவர் தப்பியோடினார். உடன் போலீசார், ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ராஜேைஷ தேடி வருகின்றனர்.