வி.சி.,நிர்வாகிகள் மீது வழக்கு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக, வி.சி.,மாவட்டசெயலாளர் உட்பட 150 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மதியம், வி.சி.,மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் 30பெண்கள் உள்ளிட்ட 150பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியல் இன மக்களுக்கு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக போர்ட்டிகோ வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கடலுார் புதுநகர் போலீசார் 150பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.