மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல் 10 பேர் மீது வழக்கு
23-Jul-2025
குள்ளஞ்சாவடி; பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி சுமதி, 40; ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் சுமதி நின்றிருந்த போது, கோவிந்தராஜ் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சுமதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், கோவிந்தராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Jul-2025