உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பறவை காய்ச்சல் பாதிப்பு மத்திய குழுவினர் ஆய்வு

பறவை காய்ச்சல் பாதிப்பு மத்திய குழுவினர் ஆய்வு

குள்ளஞ்சாவடி: பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மத்தியக்குழுவினர் இன்று (நவ.,21) ஆய்வு செய்தனர். கடலுார் அடுத்த நொச்சிக்காடு, குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியாங்குப்பம் உள்ளிட்ட கிராம கோழிப்பண்ணைகளில் கோழிகள் கொத்து, கொத்தாக இறந்தன. ஆய்வ, பறைவை காய்ச்சலால் கோழிகள் இறந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பண்ணைகளில் இருந்த கோழிகள், அரசு வழிகாட்டுதலின்படி பள்ளம் தோண்டி புதைத்து அழித்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாத வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை புதுடில்லி தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குனர் நிதி தலைமையிலான மத்திய மருத்துவக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது, நோய் தொற்று பாதித்த பகுதிகள் மற்றும், சுற்றுப்பகுதிகளில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து குள்ளஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், பொதுமக்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி