ஊராட்சி துவக்க பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
புவனகிரி; புவனகிரி சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புவி வெப்பமாதலை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் 'தாய்க்கு ஒரு மரம் நடும்' திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் புவனகிரி சொக்கன்கொல்லை துவக்கப் பள்ளி மாணவர்கள் பள்ளி மற்றும் வீடுகளில் 150 மரக்கன்றுகள் நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி பாதுகாப்பதுடன், விதிமுறைகளை பின்பற்றி இணையத்தில் பதிவிட்டனர். இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை அகிலா வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபாலன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா நன்றி கூறினார்.