உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடைக்கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கோடைக்கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம், டைகர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் நடந்த கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.டைகர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மையத்தில், கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த 20 நாட்களாக நடந்தது. இதில் கடலுார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று சிலம்பம், யோகா, டேக்வாண்டோ உட்பட பல்வேறு பயிற்சிகளை பெற்றனர்.பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி இளம் தொழில்முனைவோர் சங்க செயலாளர் ஜெயசங்கர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் செந்தில், உறுப்பினர் பயிற்சியாளர்கள் சூர்யா (சிலம்பம்), சுவாமிநாதன் (யோகா), டேக்வாண்டோ (சுப்பிரமணி), ஓவிய ஆசிரியர் திவ்யா, நடன பயிற்சியாளர் பிரதீப், தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை