உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெரு மின் விளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் சேர்மன் எச்சரிக்கை  

தெரு மின் விளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் சேர்மன் எச்சரிக்கை  

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் இயல்பு கூட்டம் நடந்தது. சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சிவா, கமிஷனர் காஞ்சனா முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், கட்டட ஆய்வாளர் கலைவாணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: கதிர்காமன்-(தி.மு.க): பண்ருட்டி நகரப் பகுதியில் தெரு மின் விளக்குகள் முறையாக பராமரிப்பதில்லை. காய்கறி மார்க்கெட் பணிகள் எப்போது துவங்கும். ஆனந்திசரவணன-(தி.மு.க): கடலுார் சாலையில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை என புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சீனுவாசன்-(தி.மு.க.): மழைகாலம் துவங்கியுள்ளதால் வாய்க்கால் துார்வார வேண்டும். குறிப்பாக, காந்திரேடு, ராஜாஜி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க துார்வார வேண்டும். சேர்மன் ராஜேந்திரன் பேசுகையில், 'நகராட்சி பகுதி முழுதும் கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படும். தெரு மின் விளக்குகள் எரியாதது சம்பந்தமாக ஒப்பந்ததார்களை அழைத்து எச்சரிப்போம். மீண்டும் எரியவில்லை என்றால் தெரு மின் விளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். காய்கறி மார்க்கெட் புதுப்பித்தல் பணிக்கு கோர்ட்டில் வியாபாரிகள் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் முறையிட்டு தடை உத்திரவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின், கட்டுமான பணிகள் துவங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை