மேலும் செய்திகள்
வணிகர் சங்க தலைவர் பிறந்தநாள் விழா
11-Dec-2024
கடலுார்; கடலுாரில் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜிக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.சேம்பர் ஆப் காமர்ஸ் கடலுார் தலைவரும், ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குனருமான துரைராஜ் தனது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கடலுாரில் நடந்த பிறந்த நாள் விழாவில், சக்ராலயா மற்றும் சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ் வரவேற்றார். டாக்டர்கள் பிரவீன் அய்யப்பன், நடராஜன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், நியூ கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் தனசேகரன், மாநகர செயலாளர் சீனிவாசன், தேவி ஓட்டல் முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ், பகுதி செயலாளர்கள் சன் பிரைட் பிரகாஷ், மாஸ்டர் பேக்கரி ராஜா, அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சக்ராலயா மற்றும் சங்காலயா மோட்டார்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே., குழும ஊழியர்கள் செய்திருந்தனர்.
11-Dec-2024