மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
14-Aug-2025
திட்டக்குடி : குமாரை பூமாலையப்பர், பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற் று தரிசனம் செய்தனர். திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தில் உள்ள பூமாலையப்பர், பச்சையம்மன் கோவில் திருவிழா கடந்த 29ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பூமாலையப்பர், பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவில் வளாகத்தை சுற்றிச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது.
14-Aug-2025