சவுடு மண் குவாரி திடீர் நிறுத்தம்
கடலுார் அடுத்த புதுச்சத்திரம், கொத்தட்டை பகுதிகளில் இயங்கி வந்த சவுடு மண் குவாரி திடீரென நிறுத்தப்பட்டதால் லாரி டிரைவர்கள் கவலையடைந்துள்ளனர்.கடலுார் - சிதம்பரம் சாலையில் உள்ள புதுச்சத்திரம் சுற்று வட்டார பகுதியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் குவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சவுடு மண் குவாரிக்கு கிராக்கி அதிகரித்தது. இந்த மண் லோடு புதிய வீடு கட்டுமான பணியில்போது கடைக்கால் நிறப்புவதற்கும், சில இடங்களில் இந்த மண்ணையே சிமென்ட் கலந்து வீடு கட்டவும் பயன்படுத்துகின்றனர்.இங்கிருந்து ஏற்றப்படும் சவுடு மண் சென்னை வரை எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 30ம் தேதி முதல் சுரங்கத் துறையில் இருந்து மண் அள்ள அனுமதி கொடுக்காததால் கடந்த ஒரு வாரமாக மண் லோடு ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக லாரிகள், லோடு இல்லாமல் இருப்பதால் டிரைவர்கள் வருவாய் இன்றி கவலையடைந்துள்ளனர்.