உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.கே., வித்யாமந்திர் பள்ளியில் சதுரங்க போட்டி

எஸ்.கே., வித்யாமந்திர் பள்ளியில் சதுரங்க போட்டி

கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் எஸ்.கே.,வித்யாமந்திர் பள்ளியில் ஸ்ரீ ராகவேந்திரா சதுரங்க அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. பள்ளி முதல்வர் அப்துல் சுபஹான், போட்டியை துவக்கி வைத்தார். பொது பிரிவினருக்கான போட்டியில் கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 190 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள், மாணவர்கள், போட்டியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை