செஸ் போட்டி பரிசு வழங்கல்
வேப்பூர்: நல்லுார் பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.விருத்தாசலம் ரோட்டரி கிளப்பின் இன்ட்ராக்ட் சங்கம் சார்பில் நடந்த போட்டிக்கு, ரோட்டரி கிளப் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அன்புக்குமரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஷீலா அன்புக்குமரன் வரவேற்றார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பிரபாகரன், பிரசன்னா, ஹாசன், லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.