மேலும் செய்திகள்
உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு!
13-Dec-2024
கடலுார் : கடலுார் வி ஸ்கொயர் மாலில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கடலுார் வி ஸ்கொயர் மாலில் இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றி கொண்டாட்டம், செஸ் 960, செஸ் இரட்டையர் போட்டி, கண்களை கட்டிக்கொண்டு சதுரங்க போட்டி நடந்தது. கடலுார் செஸ் அகாடமி தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பயிற்சியாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். புவனா பிரேம்குமார் வரவேற்றார். இதில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இளம் சிறார் நீதிக்குழுமம் உறுப்பினர் துர்கா பேசினார். முன்னதாக இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டினர்.பயிற்சியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
13-Dec-2024