சிதம்பரம் நகர தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
சிதம்பரம்: சிதம்பரம் நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட, 17, 4, 23 வது வார்டுகளில் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர் தலைமை தாங்கினர். நகராட்சி சேர்மன் செந்தில்குமார் பங்கேற்று துாய்மை பணியாளர்களுக்கு சீருடை, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் இளங்கோவன், இளைஞர் அணி அமைப்பாளர் மக்கள் அருள், துணை இளைஞரணி அமைப்பாளர் முத்துராமன், ராஜேஷ், செயலாளர் வேலு, பச்சையப்பன், கவுன்சிலர்கள் மணிகண்டன், சரவணன், கல்பனா சண்முகம், சுதாகுமார், முகமது இஸ்மாயில் , நிர்வாகிகள் ரமேஷ், தொண்டரணி அமைப்பாளர் ராயர், தென்னவன் முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.