உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆர்.கே., நகர் மனைப்பிரிவு திறப்பு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

ஆர்.கே., நகர் மனைப்பிரிவு திறப்பு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

கடலுார் : மூலக்குளம் பைபாஸ் சாலையில் ஆர்.கே., நகர் மனைப்பிரிவு திறப்பு விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் புதிய பை பாஸ் சாலையில் வெற்றிவேலா குரூப்ஸ் நிறுவனத்தின் ஆர்.கே., நகர் மனைப்பிரிவு திறப்பு விழா நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி, மனைப்பிரிவின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வெற்றிவேலா குரூப்ஸ் உரிமையாளர் அழகு வரவேற்றார்.விழாவில், பாலு, மனோஜ், சிவா, மோகன்ராஜ், ஆனந்த், தங்கவேல், அருண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.புதிய மனைப்பிரிவில் பிரம்மாண்டமான நுழைவு வாயில்கள், நடை பயிற்சியாளர்கள் ஓய்விடம், சிறுவர்கள் பூங்கா, திறந்தவெளி கலையரங்கம், இறகுப்பந்து விளையாட்டு திடல், எல்.இ.டி., தெருமின் விளக்கு வசதி, வாய்க்கால் வசதி, உடற்பயிற்சி திடல், மனையை சுற்றிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா, 30 அடி அகல சிமென்ட் சாலை உள்ளிட்ட வசதிகள் உள்ளது. 70 சதவீதத்திற்கும் மேல் மனைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மனைகளே விற்பனைக்கு உள்ளது என, உரிமையாளர் அழகு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை