முதல்வர் கோப்பை: விளையாட்டு போட்டி
கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. கடலுார் மாவட்டத்தில், கடந்த 26ம் தேதி முதல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் துவங்கி நடந்து வருகிறது. கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. கால்பந்து, வீல்சேர் டேபிள் டென்னிஸ், நீச்சல், பேட்மிண்டன் மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமாரின் மேற்பார்வையில் நடந்தது. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.