உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழா

கடலுார்: கடலுார் சி.எஸ்.ஐ., துாய எபிபெனி திருச்சபை வளாகத்தில், திருநங்கைகளுக்கான கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவிற்கு கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருச்சபை போதகர் வெஸ்லிராஜ் குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் வரவேற்றார். திருநங்கையரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. திருச்சபை பொறுப்பாளர்கள் ஆல்வின்ரத்னராஜ், சாமுவேல் சரவணன், சைமன் மற்றும் நெல்சன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர் ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர். திருநங்கைகள் பிரித்திக் ஷா, ரக் ஷிதா, நாச்சியா, ஷில்பா ஆகியோர் தங்களுக்கு நிரந்தரமான நிலம் மற்றும் வீடு வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர். தொழில்முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ.,(குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) திட்டம், தையல்பயிற்சி, சட்ட விழிப்புணர்வு பற்றி விளக்கம் மாவட்டதிட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அளிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற 76 திருநங்கைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அரிசி, மளிகை பொருட்கள், புடவைகள் மற்றும் விருந்தும் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ