உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுாரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் செம்மண்டலம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமதாஸ், சுதர்சன்பாபு, செம்மலர், சிப்காட் செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநிலக்குழு ஜீவானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், கட்டுமானம், முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய ஆன்லைன் செயலியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்து பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆன்லைனில் நலவாரிய தரவுகள், ஆவணங்கள் அழிந்ததற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஆளவந்தார், சாவித்திரி, தேசிங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை