உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகர வர்த்தக நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்

நகர வர்த்தக நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்

ஸ்ரீமுஷ்ணம்,: ஸ்ரீமுஷ்ணத்தில் நகர வர்த்தக நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சங்க தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் மண்டல வர்த்தக நலச்சங்க பேரமைப்பு தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வர்த்தக நலச்சங்க தலைவர்கள் கோபு, மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், குமார், தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூவராகமூர்த்தி, துணை அமைப்பாளர் மகேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஆதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீமுஷ்ணத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளையும், பூவராகசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருத்தேர் உள் சக்கரங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை