உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளிகளில் துாய்மை பணி

பள்ளிகளில் துாய்மை பணி

மந்தாரக்குப்பம் : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் வகுப்பறைகளில் துாய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மந்தாரக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் துாய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, வகுப்பறை, ஆய்வுக்கூடம், சமையல்கூடம், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகள் துாய்மைப்படுத்த வேண்டுமென, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால் துாய்மை பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ