உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூடப்பட்ட பீர் தொழிற்சாலை; வாட்ச்மேன் அடித்து கொலை

மூடப்பட்ட பீர் தொழிற்சாலை; வாட்ச்மேன் அடித்து கொலை

சங்கொலிக்குப்பம்; கடலுார் அருகே மூடப்பட்ட பீர் தொழிற்சாலை வாட்ச்மேனை, அடித்து கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், சங்கொலிக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சூர்யா, 26. பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் வலது கை செயலிழந்தது. இவர், நான்கு ஆண்டுகளாக சங்கொலிக்குப்பம் அருகே மூடப்பட்டுள்ள பீர் தொழிற் சாலையில் வாட்ச்மேனாக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு சூர்யாவை அவரது தந்தை வேல்முருகன் சந்தித்து, பேசி வந்தார். பின், நள்ளிரவில் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்டு, சூர்யா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார், சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை, எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை