உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு  

கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு  

கடலுார் : கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் 2025-26ம் ஆண்டிற்கான தலைவராக ரவி, செயலாளராக வரதராஜன், பொருளாளராக ஆனந்தராஜ் பொறுப்பேற்றுக்கொண்டனர். சங்கத்தின் 2024-25ம் ஆண்டு தலைவர் செந்தில்பாரதி வரவேற்றார். உதவி ஆளுநர் பவானி ஜெய்சங்கர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன், மணி பேசினர். ஆலோசகர் பட்டேல், முன்னாள் உதவி ஆளுநர் பூங்குன்றன், அசோக், வெங்கடேசன், ரோட்டரி சங்க முன்னாள் பொருளாளர் வேல்முருகன், எலைட் கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினியர் சந்தானகிருஷ்ணன், ஏ.பி.,ஜூவல்லரி கணேஷ், ரமேஷ், ஏ.ஆர்.சி.,அசோசியேட்ஸ் அருண், பாரத் பில்டர்ஸ் சுரேஷ்பாபு, சூர்யா பில்டர்ஸ் வெங்கடாசலம், விஜயசங்கர், பங்கஜம் பிளானர்ஸ் ஆறுமுகம் வாழ்த்திப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை