உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மை மிஷன் 2.0 இயக்கம் கலெக்டர் துவக்கி வைப்பு

துாய்மை மிஷன் 2.0 இயக்கம் கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார் : அரசு அலுவலகங்களில் பயனற்ற பழைய பொருட்களை சேகரித்து தரம்பிரித்து மறுசுழற்சிக்காக விற்பனை செய்யும் துாய்மை மிஷன் 2.0 இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். அரசு அலுவலகங்களில் உள்ள பயனற்ற பழைய பொருட்களை சேகரித்து தரம்பிரித்து மறுசுழற்சிக்காக விற்பனை செய்யும் துாய்மை மிஷன் 2.0 இயக்கம் துவக்க விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், 'நகரம் மற்றும் கிராம பகுதிகளில் பொது இடங்கள், அரசு அலுவலகங்களை துாய்மையாக பராமரிக்க துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துாய்மை மிஷன் 2.0 இயக்கம் மூலம் அரசு அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்பட்டு தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கணினி, ஜெராக்ஸ் மிஷன், பிரிண்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை முறையாக சேகரித்து தரம் பிரித்து தகுந்த வழிகாட்டுதலின்படி மறுசுழற்சிக்காக விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் அரசு அலுவலகங்கள் துாய்மையாக பராமரிக்க வழிவகுக்கும். தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டு மைய அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் என பல்வேறு துறை அலுவலகங்களில் துாய்மை மிஷன் 2.0 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார். நி கழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை