உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன் வளர்ப்புத் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு

மீன் வளர்ப்புத் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம், வத்தராயன்தெத்து கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்க விழா நடந்தது. மண்டல மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வேல்முருகன் வரவேற்றார். தாசில்தார் அன்பழகன், பி.டி.ஓ., சரவணன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், துவக்கி வைத்து, மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகள் வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'கடலுார் மாவட்டத்தில் கிராம ஊராட்சி குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க மீன்குஞ்சு வளர்க்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி மா வட்டத்தில் ஊராட்சி குளங்களில் 5 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்க்கப்படும். ஊராட்சி குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதன் மூலம், மாவட்டத்தில் நடப்பாண்டில் 265 டன் வரை உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் கிராமங்களில் புரதசத்து மிகுந்த மீன்கள் கிடைப்பதுடன், கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !