மேலும் செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
03-Jun-2025
கடலுார் மாநகரம் அருகே பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில், தெரு விளக்கு எரியவில்லை என காங்., பிரமுகர் ஊராட்சி செயலரிடம் பல முறை புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த ஊராட்சி செயலர் கண்டுகொள்ளாததால் வேறு வழியின்றி இருள் சூழ்ந்த அந்த வீதியை படம் எடுத்து கலெக்டருக்கு அனுப்பினார். இதை பார்த்த கலெக்டர் உடனடியாக அந்த தகவலை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதன் பின்னரும் தெரு விளக்கு எரிவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அந்த பிரமுகர் மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து தெருவிளக்கு எரியாததை பற்றி மீண்டும் நினைவுபடுத்தினார். அதற்கு அந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஆமாம், கலெக்டர் கூட ஒரு வாரம் முன்பு இந்த தகவலை எனக்கு அனுப்பி இருந்தார்.ஆனால் விளக்குகள் ஸ்டாக் இல்லை என கேஷூவலாக பதில் கூறினார். அதைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த தெருவில் உள்ள அனைத்து விளக்குகளையும் மாற்றி நடவடிக்கை எடுத்தார். அரசு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்.
03-Jun-2025