உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

 பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

கடலுார்: மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற, துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவியை கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார். கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 1 மாணவி ரூபிதா பங்கேற்று கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்றார். மாவட்ட அளவிலானஇப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ