உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு இல்லாத மாணவர்கள், பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடந்தது.சி.இ.ஓ., எல்லப்பன் தலைமை தாங்கினார். டி.இ.ஓ., துரைப்பாண்டியன், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு குறித்து விளக்கி பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விருத்தாசலம் அடுத்த எடைச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 496 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர் நித்திஷ், கோ.ஆதனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 494 மதிப்பெண் எடுத்த கணேஷ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த அனைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், 758 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு சான்றிதழ் வழங்கி விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை