உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேய்ச்சல் நிலமாக மாறிய கல்லுாரி விளையாட்டு மைதானம்

மேய்ச்சல் நிலமாக மாறிய கல்லுாரி விளையாட்டு மைதானம்

திட்டக்குடி; திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 1,450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 7 ஏக்கர் பரப்பிலான கல்லுாரி வளாகத்தில், 3 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. ஆனால் கல்லுாரி துவங்கிய நாள் முதல் இதுவரை விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால், கல்லுாரி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், கல்லுாரிகள் இடையே நடக்கும் போட்டி அருகிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, பராமரிப்பின்றி உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும், என கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாணவர்கள் கூறுகையில், 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் விளையாட்டு மைதானம் இல்லாததால், விளையாட்டு பயிற்சியில் ஈடுபட முடிவதில்லை. கல்லுாரி மற்றும் மண்டல அளவில் நடக்கும் போட்டிகள் இங்கு நடத்த முடியாமலும், போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெற முடியாமலும் தவிக்கிறோம். மைதானம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. விளையாட்டு மைதானத்தை நகராட்சி சார்பில் சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்டித்தந்தால் விளையாட்டில் சாதனை படைப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ