உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபைல் போன் கடையில் கல்லுாரி மாணவி தற்கொலை

மொபைல் போன் கடையில் கல்லுாரி மாணவி தற்கொலை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மொபைல் போன் கடை கழிவறையில், கல்லுாரி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனுார் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் தர்ஷினி,18; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். மேலும், ஜங்ஷன் சாலையில் உள்ள எருமனுாரை சேர்ந்த முத்து, 39, என்பவரின் மொபைல் போன் கடையில் பகுதி நேரமாக பணிபுரிந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு வந்த தர்ஷினி, மாலை 4:30 மணிக்கு தனது ஆண் நண்பருக்கு மொபைல் போனில் வீடியோ காலில் பேசினார். அப்போது, கடையில் உள்ள கழிவறைக்கு சென்று, துப்பட்டாவால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். இதுகுறித்து அந்த நபர், கடை ஊழியர்களுக்கு மொபைல் போனில் தெரிவித்தார். உடன், ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, தர்ஷினி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை