உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

 கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசுக் கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடம் நடத்த விரிவுரையாளர்கள் வேண்டும் என கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் அரசுக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடலுார் தேவனாம்பட்டினம் அரசுக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் காரணமாக, வகுப்புகள் முறையாக நடக்கவில்லை என்பதால் நேற்று கல்லுாரி மாணவர்கள் பாடம் நடத்த விரிவுரையாளர்கள் வேண்டும் எனக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கல்லுாரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை