கல்லுாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
கடலுார்: தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியின் கடலுார் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் நடந்த விழாவில், கிளைத் தலைவராக ராஜலட்சுமி, துணைத் தலைவராக கலையரசி, செயலாளராக விஜயலட்சுமி, இணை செயலாளராக கவிதா, பொருளாளராக செல்வகுமாரி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ஆனந்தி, நிஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப் பேற்றுக் கொண்டனர். முன்னாள் கிளைத் தலைவர் திலக்குமார், செயலாளர் சேதுராமன், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன் சாந்தி, அபிராமசுந்தரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.