உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி

வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மையத்தில், கடல் வண்ண மீன் வளர்ப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல்மாமன்ற நிதி உதவியுடன், தேசிய மீன் வள மரபணு பேணகம் கடல் வண்ண மீன் வளர்ப்பது குறித்த பயிற்சியை ஏற்பாடு செய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கடலோர பகுதி பழங்குடியினர் 80 பேர் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மையத்தில் நடந்த பயிற்சி முகாமில், தமிழ்நாடு அறிவியல் மாமன்ற முதுநிலை ஆராய்ச்சி அதிகாரி ரமணன் பங்கேற்று பயிற்சியை துவக்கி வைத்தார்.தேசிய மீன் வள மரபணு பேணகம் இயக்குநர் அஜீத்குமார் பேசுகையில்,தேசிய மீன் வள மரபணு பேணகத்தின் வண்ண மீன் பொறிப்பகத்தில் உற்பத்தி செய்து ஒரு மாதம் காலம் வளர்ந்தகுஞ்சுகளை, வழங்குவதுடன், பயனாளிகள் இரண்டு மாதம் வளர்த்து விற்பதற்கான உதவிகள் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் கடலோர பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன், கடல்வளம் பாதுகாக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ