நல்லாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த ராசாபாளையம் அரசு நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் காசிநாதனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விருத்தாசலம் ரயில்வே திருமண மண்டபத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு மாநில தலைமை நிலைய செயலர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் வேதரத்தினம் வரவேற்றார். மாநில பொது செயலர் தியோடர் ராபின்சன், தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் கணேசன் வாழ்த்திப் பேசினர். டி.இ.ஓ., (இடைநிலை) சேகர், திருச்சி பாரதிதாசன் பல்கலை., துணை பதிவாளர் பன்னீர்செல்வம், என்.எல்.சி., பொது மேலாளர் திருநாவுக்கரசு, ஜெயின் ஜூவல்லர் உரிமையாளர் அகர்சந்த், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரி மேலாண்மை கூட்டமைப்பின் பொது செயலர் நடராஜன், மாடர்ன் கல்வி குழும தலைவர் பழனிவேல், நிர்வாகி விஜயகுமார், இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ், நெய்வேலி ஸ்ரீ சாந்தா ஆறுமுகம் கல்வி குழுமம் ராஜாராமன், சேத்தியாதோப்பு சந்திரா மேல்நிலை பள்ளி தாளாளர் செந்தில்குமார், கும்பகோணம் பாரதி உதவி பெறும் துவக்கபள்ளி குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட துணை தலைவர் கண்ணையன் நன்றி கூறினார்.