புகார் பெட்டி
கழிவறை திறக்கப்படுமா?கடலுார் முதுநகர் ரயில்வே ஜங்சனில், கழிவறை பூட்டியே உள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஜெயா, முதுநகர்.விபத்து அபாயம்கடலுார், வண்ணாரப்பாளையம் பகுதியில், மழைக்குப்பின் நடந்த சீரமைப்பு பணியின் போது திறக்கப்பட்ட பாதாள சாக்கடையின் மேன்ேஹால் மூடப்படாததால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.கணேஷ், வண்ணாரப்பாளையம்.நிழற்குடை தேவை?பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நலன்கருதி, புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனந்தன், சவுந்திரசோழபுரம்.சாலை சீரமைக்கப்படுமா?பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் - ஓ.கீரனுார் இடையே போக்குவரத்து லாயக்கற்ற தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கர், ஓலையூர்.