உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புகார் பெட்டி...

 புகார் பெட்டி...

மின்விளக்குகள் எரியாததால் அவதி கடலுார், பெண்ணையாற்று பாலம் மற்றும் பெரியகங்கணாகுப்பம் சாலை பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரியாததால், மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். - பாரதி, கடலுார் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா? விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள காத்திருப்பு கூடத்தில் பயனாளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திட வேண்டும். - குமரேசன், விருத்தாசலம். நோயாளிகள் சிரமம் நெல்லிக்குப்பம், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணி செய்யாமல் இருப்பதால், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். -கணபதி, நெல்லிக்குப்பம் நிழற்குடை அமைக்கப்படுமா? விருத்தாசலம் கடை வீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதியின்றி பயணிகள் மழையில் நனைந்தபடி, திறந்தவெளியில் நிற்கும் அவலம் தொடர்கிறது. - பிரேம்குமார், விருத்தாசலம். பழுதடைந்த பள்ளி கட்டடம் புவனகிரி அருகே, பழுதடைந்த சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். - மணி, புவனகிரி விபத்து அபாயம் விருத்தாசலம் புறவழிச்சாலையில், மணி முக்தாற்றின் மீது பாலம் கட்டும் பணி மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. - கமலநாதன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை