உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

வாகன ஓட்டிகள் அச்சம் விருத்தாசலம் மணலுார் ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு இணைப்புகள் பெயர்ந்து, அதிக சப்தம் எழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். -பார்த்திபன், விருத்தாசலம். போக்குவரத்து பாதிப்பு விருத்தாசலம் கடைவீதியில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது. -விக்னேஷ், விருத்தாசலம். தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? மங்களூரில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமமடைகின்றனர். - பிரபு, மங்களூர். பயணிகள் அவதி சேலம்-கடலுார் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, அடரியில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பயணிகள் அவதியடைகின்றனர். -ராஜேஷ், அடரி. விபத்து அபாயம் விருத்தாசலம் கோ.பொன்னேரி ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. -சுரேஷ்குமார், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி