உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் பெயரில் மோசடி எஸ்.பி.,யிடம் புகார்

கலெக்டர் பெயரில் மோசடி எஸ்.பி.,யிடம் புகார்

கடலுார் : கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு வைத்து, மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில், கடலுார் புருகீஸ்பேட்டையைச் சேர்ந்த கண்ணுசாமி அளித்த மனு: எனது முகநுால் பக்கத்தில் மாவட்ட கலெக்டர் பெயரிலான போலி முகநுால் கணக்கு மூலம் தொடர்பு கொண்ட நபர், தனது நண்பரின் பர்னிச்சர்களை பெற்றுக் கொண்டு பணம் தருமாறு கூறினார். சந்தேகமடைந்த நான் பணம் தர மறுத்து விட்டேன். எனவே, கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ