உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் புகார் மேளா; மனுக்கள் பெற்ற எஸ்.பி.,

கடலுாரில் புகார் மேளா; மனுக்கள் பெற்ற எஸ்.பி.,

கடலுார்; கடலுார் எஸ்.ஆர்.ஜே., காவலர் நல திருமண மண்டபத்தில், மாவட்ட காவல் துறை சார்பில் புகார் மேளா நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெற்றார். பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களை, சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.,க்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை