மேலும் செய்திகள்
ஆயதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
06-Sep-2024
கடலுார்: தமிழக மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா, கடலுாரில் நடந்தது.தமிழக மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த ஜூலை மாதம் கடலுாரில் துவங்கியது. சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 40 பேர் பங்கேற்றனர். 90 நாள் நடந்த பயிற்சியில், உடற்பயிற்சி மற்றும் போட்டித்தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நேற்று நடந்த பயிற்சி நிறைவு விழாவில், கடலுார் மாவட்ட எஸ்.பி.,ராஜாராம் பங்கேற்று அறிவுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் பத்மா, பயிற்சியாளர் ராஜாராம், ஈசன் பயிற்சி மைய பயிற்சியாளர்கள் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் பங்கேற்றனர்.
06-Sep-2024