பணி நிறைவு பாராட்டு விழா
கடலுார்: மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய, சப் இன்ஸ்பெக்டருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. கடலுார் மாவட்ட எஸ்.பி., மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியவர் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன். எஸ்.பி., யின் நடவடிக்கைகள், மாவட்டத்தில் உள்ள போலீசார் பதிவு செய்த முக்கிய வழக்குகள் தொடர்பாக நாளிதழ்களுக்கு குறிப்புகள் வழங்கி வந்தார். அவரது பணிக்காலம் நிறைவடைந்ததையொட்டி கடந்த ஜூன், 30ம் தேதி ஓய்வு பெற்றார். அதையொட்டி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது. எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, பணி ஓய்வு பெற்ற ராமச்சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் அதிகாரிகள் வாழ்த்தினர்.